தெல்லிப்பளையில் ஆசிரியையின் வீட்டில் திருட்டு

robberyஆசிரியையின் வீட்டில் இரவு நுழைந்த திருடர்கள் சுமார் பதினைந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகளை திருடிச்சென்ற சம்பவம் தெல்லிப்பளை கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை தெல்லிப்பளை கிழக்கு ஆனைக்குட்டி மதவடிக்கு அருகாமையில் உள்ள வீட்டில் புகைக் கூட்டின் வழியாக நுழைந்த திருடர்கள், இந்த துணிகரமான திருட்டை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டினுள் தனது கைப்பையில் குறிப்பிட்ட நகைகளை வழமையாக வைத்திருப்பதாகவும் அதேபோன்று நேற்ற முன்தினமும் இரவு நகைகளை பாதுகாப்பாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு படுக்கைக்குச் சென்றுள்ளார்.

காலையில் அயல் வீட்டில் உள்ள சிறிய பிள்ளையொன்று வந்து டீச்சருடைய கைப்பை வெறும் காணியில் காணப்படுவதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கைப்பை வைத்த இடத்திற்குச் சென்று பார்த்த வேளையில் கைப்பை இல்லாததைக் கண்டதுடன் குறிப்பிட்ட வெற்றுக் காணியில் சென்று கைப்பையை உறுதிப்படுத்திய பின்னர் தெல்லிப்பளை பொலிஸாரிடம் களவு சம்பந்தமாக முறையிடப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸார் குறிப்பிட்ட களவு சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor