தென்மராட்சி வலயத்தில் ஜி.சீ.ஈ. சாதாரணதர பெறுபேற்றை அதிகரிக்க புதிய செயற்றிட்டம்!

EXAMதென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் இந்த வருட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்குடன் புதிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தை இன்று வியாழன் தொடக்கம் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை பிரதி செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் பி.ப.2 மணி தொடக்கம் 4 மணிவரை அந்தந்த பாடசாலைகளில் நடத்துவதற்கான கால அட்டவணைகள் தயாரிக் கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பெற்றோர் பாடசாலை அதிபர், பாட ஆசிரியர்கள், மாணவர் கள் ஆகியோருடன் வலயத் தின் பாடங்களின் முதன்மை ஆசிரியர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல் விப் பணிப்பாளர்கள் பங்கு பற்றி மாணவர்களின் பாடங் கள் தவணைப் பரீட்சைப் புள்ளிகள் தொடர்பில் கலந்துரை யாடல் நடத்தப்படவுள்ளன.

கலந்துரையாடலில் மாணவர்கள் கடந்த தவணைப் பரீட் சைகளில் பெற்ற புள்ளிகள் யாவும் பெற்றோருக்கு பாட ஆசிரியர்களால் அறிவிக்கப்பட்டு பாடத்தில் ஏற்படக்கூடிய மதிப்பீடுகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

வலயத்தைச் சேர்ந்த 31 பாடசாலைகளில் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட கால அட்டவணைப் பிரகாரம் இன்று கைதடி முத்துக் குமாரசாமி ம.வியிலும், நாளை கைதடி குருசாமி வித்தியாலயத்திலும் நாளை மறுதினம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், எதிர்வரும் 17 ஆம் திகதி விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்திலும், 23 ஆம் திகதி மந்துவில் ஸ்ரீபாரதி வித்தி யாலயத்திலும்,

எதிர்வரும் 24 ஆம் திகதி இடைக் குறிச்சி ஸ்ரீசுப்பிரமணிய வித்தி யாலயத்திலும், 26 ஆம் திகதி நாவற்குழி ம.வியிலும், 27 ஆம் திகதி மிருசுவில் றோ.க.த. க.பாடசாலையிலும், 30 ஆம் திகதி சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் இந்தச் செயற்றிட்டம் நடைபெறுமென வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ண குமார் அறிவித்துள்ளார்.