தென்மராட்சி பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மூன்றாம் கட்ட உலர் உணவுப்பொருட்கள் குறித்த பிரதேச பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளைகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலக இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இலகு வேலைத்திட்டத்தில் பங்கு பற்றிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக அரிசியும் வழங்கப்பட்டுள்ளது.