தென்மராட்சியில் பொலிஸார் சோதனை

jaffna-policeதென்மராட்சி பாலாறு பகுதிகளிலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகள் தலைமையில், சுன்னாகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட பொலிஸார் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்று முன்தினம் மணற்கொள்ளையினை தடுக்கச் சென்ற பொலிஸ் வாகனத்தினை அங்கிருந்த சிலர் வீதித்தடைகள் போட்டு மணல் கடத்திய வாகனத்தினை தப்பிக்க வைத்தமை மற்றும் கொடிகாமம் பொலிஸார் இருவரை நேற்று அப்பகுதியினைச் சேர்ந்த சிலர் தாக்க முற்பட்ட காரணங்களினாலேயே இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி…

கொடிகாமத்தில், பொலிஸாரை தாக்க முயற்சி