தென்னிலங்கை வியாபாரியை ஏமாற்றிய சுன்னாக வியாபாரி

cheque forgery2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி கொழும்பைச் சேர்ந்த ஒருவரினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

சுன்னாகத்தில் புடைவை வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் 2இலட்சத்து 10ஆயிரம் ரூபா பெறுமதிக்கு புடைவைகளை கொழும்பில் உள்ள வியாபாரி ஒருவரிடம் கொள்வனவு செய்துள்ளார். அதற்கான பணத்தை சுன்னாகத்தில் உள்ள வியாபாரி காசோலை மூலம் செலுத்தியுள்ளார்.

காசோலையினை வங்கியில் மாற்ற சென்ற போது குறித்த கணக்கில் பணம் இருக்கவில்லை. இதனையடுத்து குறித்த வியாபாரியினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor