துப்பாக்கி சூட்டில் இராணுவ வீராங்கனை காயம்

gun-fireயாழ்ப்பாணம், அச்செழு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவ வீராங்கனை ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சக வீராங்கனையின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததை அடுத்தே இந்த மேற்படி வீராங்கனை காயமடைந்துள்ளார் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

அச்செழு பிரதேசத்திலுள்ள 511 படைப்பிரிவு முகாமில் நேற்று பிற்பகல் 2 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமித்ரா (வயது 33) என்ற வீராங்கனையே சம்பவத்தில் காயமடைந்தவராவார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.