துப்பாக்கி சன்னம் வெடித்ததில் சிறுவன் காயம்

accidentதுப்பாக்கி சன்னம் வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டத்தரிப்பு பகுதியைச் சோந்த குறிப்பிட்ட சிறுவன் கிளாலியில் உள்ள தங்களுடைய உறவினருடைய வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.

அங்கு விளையாடிக்கொண்டிருந்தபோது வெடிக்காத நிலையில கிடந்த துப்பாக்கிச் சன்னத்தை கண்டெடுத்துள்ளார்.
அந்த சன்னத்தை கல்லினால் குத்தி சோதனை மேற்க்கொண்டபோதே அது வெடித்து சிதறியுள்ளது. இதனால் அவருடைய காலின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்கபண்டாரா தலைமையிலான பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor