துப்பாக்கிகளை வழங்கிவைத்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்!

விவசாயத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 18 கமக்கார அமைப்புக்களுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன் துப்பாக்கிகளை வழங்கிவைத்தார்.

gun

2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 5 இலட்சம் பெறுமதியான 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களுக்கு நேற்றையதினம் (புதன்கிழமை) முள்ளியவளை கமநலசேவை திணைக்களத்தில் வைத்து வழங்கினார்.

அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இவற்றைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளைப் பெற்றுத்தருமாறு மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், வடக்கு மாகாண சபை துப்பாக்கிகள் வழங்கி வைத்தமைக்கு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor