தீவிரவாதிகளின் வெறித் தாக்குதலில் 38 பேர் பலி

nigeereyaநைஜீரியாவில் மீண்டும் வெறிச்செயல்களை ஆரம்பித்துள்ள தீவிரவாதிகள் குழந்தைகள் உட்பட 38 பேரைக் கொடூரமாக கொன்று குவித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பல ஆண்டுகளாக இரு பிரிவினருக்கு இடையே நடந்து வரும் மோதல்களால் மக்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று வடக்கு நைஜீரியாவின் படான்கர்ஷி கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் கிட்டதட்ட 21 பேரை கொடூரமாக கொன்று சாய்த்தனர்.

மற்றொரு கிராமமான நன்டூ கிராமத்தில் அனைத்து பொருட்களையும் அடித்து, உடைத்து 17 பேரைக் கொன்று குவித்தனர். துப்பாக்கிச் சூடில் பாதிக்கப்பட்ட இன்னும் பல கிராம மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகின்றது. பலியான அப்பாவி மக்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts