Ad Widget

‘திலீபனின் ஆசையை நிறைவேற்றுவோம்’ : முன்னாள் போராளிகள் சபதம்

‘தியாகி திலீபனின் அஹிம்சை வழிப் போராட்டத்தினை முன்மாதிரியாகக் கொண்டு அஹிம்சை வழியில் போராடி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்’ என முன்னாள் போராளிகள் சபதம் எடுத்துள்ளனர்.

தியாகி திலீபன் அஹிம்சை வழிப் போராட்டத்தின் 29வது நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஜனநாயக போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் இன்று காலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் போராளிகள் இவ்வாறு கூறினார்கள்.

‘தியாகி திலீபன் என்ன நோக்கத்திற்காக அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை நீத்தாரோ? அதே வழியில் தமிழ் மக்களுக்கான சுபீட்சமான அரசியல் அங்கீகாரத்தினை, ஜனநாயக ரீதியில் போராடி வென்றெடுப்போம்’ என தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் நின்று சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர்.

Related Posts