திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு -முதலமைச்சர்

புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

o-op-meeting

வடமாகாண கூட்டுறவுத் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போது வடமாகாண சபையினால் கூட்டுறவுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமை தொடர்பில் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர்மேலும் தெரிவித்ததாவது,

நிதிப்பற்றாக்குறைதான் எங்களுடைய மிகப் பெரிய பிரச்சினை எமக்கு தேவையான நிதியைத் தருவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு பெறப்படும் நிதியை இங்கு கொண்டுவர முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

ஆனால் இது தொடர்பாக பேசி முடிவுகளை எடுப்பதற்கிருக்கின்றோம். எதிர்வரும் வாரத்தில் இச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். இன்னும் இரு வார காலத்தில் நிதிப்பற்றாக்குறை தொடர்பில் எழுப்ப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் வழங்கப்படும் – என்றார்.