திருவிழாவில் நகைகள் கொள்ளை: 4 பெண்கள் கைது

arrest_1கோண்டாவில், வைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸாரே இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் நால்வரும் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.