சங்கானை பிரதேசத்தின் திருவடிநிலைப்பகுதியியில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளாக்ள் எதிர்கொண்டு வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் நேற்று ஸ்தலத்திற்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பின் தீர்வுகாண்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
திருவடிநிலைக் கடற்பகுதியில் அலைமகள், கெங்காதேவி ஆகிய கடற்தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 85 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிறகுவலைகளைப்பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபடுவதற்கான எல்லைகளை தீர்மானிப்பதில் இவ்விருசங்கங்களும் நீண்டநாட்களாக பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தன எனவே நேற்று குறித்த பகுதிக்குவிஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு தொழிலாளர்களிடம் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
அதனடிப்படையில் அவர்கள் தற்போது தொழில் செய்வதற்கு சாதகமாக காணப்படும் கடற்கரையோரத்தின் நீளத்தை அளவீடுசெய்து தொழிலாளர்களின் எண்ணிக்கையினை அடிப்படையாகக்கொண்டு தொழிற்பாடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கணேசமூர்த்தியைப் பணித்தார். அத்தோடு வழங்கப்படும் துறையில் காணப்படும் பாறைகளை அகற்றுவதற்கான நிதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.
இவ்விஜயத்தின்போது வலிமேற்குபிரதேசசபை உறுப்பினர் பாலகிருஸ்ணன் (ஜீவன்) சங்காணை பிரதேச செயலக பிரதித்திட்டப்பணிப்பாளர் சிவகுமார் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர்கள் கடற்தொழிலாளர்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.