திருமண வைபவத்திற்கு சென்றவர்களை இடித்து தள்ளியது பட்டாரக வாகனம்! 3 பேர் படுகாயம்

accedent_autoதிருமண வைபவத்திற்கு சென்று கொண்டிருந்த மூச்சக்கர வண்டியை பட்டாரக வாகனம் ஒன்று இடித்து தள்ளியதில் மிகவும் மோசமான நிலையில் மூச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இக்கோர விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம், மருதனார் மடச்சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

உடுவிலில் நடைபெற்ற திருமணம் வைபவத்திற்கு சென்றவர்களை அனுமதியின்றி மரம் ஏற்றிவந்த மேற்படி வாகனம் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் மூவரும் சிகிச்சைக்களுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.