திருநெல்வேலி, ஹட்டன் நஷனல் வங்கிக்கிளையில் தீ

திருநெல்வேலி ஹட்டன் நஷனல் வங்கிக்கிளையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீயை  யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HNB-thirunelvely

மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. எனினும், சேத விபரங்கள் வெளியாகவில்லை.