திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 5 பேருக்கும் , சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்குமாக 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி பாரதி புரம் பகுதி கடந்த மாதம் 28ஆம் திகதி முதலாக 26நாட்களாக தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor