திருநெல்வேலியில் வீதியோரமாய் ஆணொருவரின் சடலம் மீட்பு

body_foundதிருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பிறவுன் வீதி, கொக்குவிலைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜெ. ரஞ்சனதாஸ் (வயது 56) என அடையாளம் காணப்படுள்ளார்.

குறித்த நபர் வியாபார விடயமாக கொழும்பு சென்று இன்று அதிகாலை மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

திருநெல்வேலி பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி செல்ல முற்பட்டவேளை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட பொலிஸார், பிரதே பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor