திருநெல்வேலியில் முடக்கப்பட்ட பகுதிக்குள் 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை!!

கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கு குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது 127 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதில் 51 பேர் திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதனை அடுத்து குறித்த கிராம சேவையாளர் பிரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வெளியில் இருந்து உள்நுழையவும் , வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்குள் 1100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அதில் அநேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையில் தொழில் புரிபவர்களுக்கு , தினசரி கூலி தொழிலாளிகளும் உள்ளடங்குவதனால் , அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறவுகள் முன் வர வேண்டும் என தவிசாளர் கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor