திருநெல்வேலியில் அத்துமீறி நுழைந்து வீடுகளுக்குள் டெங்கு சோதனை!

டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தி யாழ். திருநெல்வேலி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நபரினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் பொலிஸாரோ வேறு ஊழியர்களோ இன்றி தனியாக வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனையிட்டுள்ளார்.

வீடுகளை சோதனையிட்டது மாத்திரமன்றி, வீட்டு உரிமையாளர்களின் பெயர் விபரங்களையும் அவர் திரட்டியுள்ளார்.

மேற்படி நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட மக்கள், நீங்கள் எப்பிரிவை சேர்ந்தவர் என வினவியபோது, அதற்கு உரிய பதிலளிக்காது அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இதனால் திருநெல்வேலி பகுதியில் சில மணி நேரங்கள் பதற்றம் நிலவியுள்ளது.

Related Posts