திருடப்பட்ட சிலைகள் மீட்பு

kovil-silai-police-chunnakamதாவடி அம்பலவாணர் முருகமூர்த்தி ஆலயத்தில் காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினாலேயே சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் திருடப்பட்ட பல இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஜம்பொன் சிலைகளே மீடகப்பட்டுள்ளன. இதன்போது, திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தவுள்ளனர். திருடப்பட்ட முருகன் வள்ளி தெய்வயானைச் சிலைகள் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிலைகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

கோயில் சிலைகள் திருட்டு