தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் இன்று

உலகலாவிய ரீதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையில் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் மிக முக்கியமானதும் இறுதியுமான கடமையாக ஹஜ் திகழ்கின்றது. இக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு வசதிபடைத்தவர்கள் மக்கா செல்வது வழமை.

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, உலகின் சகல பாகங்களில் இருந்தும் புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக்கணக்ககானவர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.

ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய அன்பர்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related Posts