தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைர் ஆனந்தசங்கரியும் கலந்துகொண்டு தியாகதீபத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதமிருந்து அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே எதிர்வரும் 26ஆம் திகதி மரணத்தைத் தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.