Ad Widget

தியாகதீபம் திலீபனுக்கு நாளை கிளிநொச்சியில் நினைவேந்தல்! அனைவருக்கும் அழைப்பு!!

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து நடத்தவுள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வானது, தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், மற்றும் பிரதேச மக்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தியாகி திலீபனின் அஹிம்சை வழிப் போராட்டத்தின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபியிலும் அஞ்சலி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts