தாதிய மாணவர்கள் இரத்ததானம்

Blood-Donationசர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு தாதிய மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இரத்ததானம் செய்தனர்.

தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் வல்லிபுரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினருக்கு சுமார் 70 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தனர்.

இந்த இரத்ததான நிகழ்வில் தாதிய உத்தியோகத்தர் சங்க தலைவர் என்.நற்குணராஜா மற்றும் தாதிய போதனாசிரியர்கள், தாதிய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும். இதில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor