தாதிய உத்தியோகஸ்தர்கள் நாளை ஒரு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

Jaffna Teaching Hospitalயாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாளை 19ஆம் திகதி 1 மணித்தியாலய பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார்.

தாதிய உத்தியோகஸ்தர் சங்கத்தின் தாய் சங்க ஏற்பாட்டின் அடிப்படையில், நாளை 19ஆம் திகதி இந்த பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு, மேலதிக கொடுப்பனவு, மாகாண பட்டதாரிகளை உள்வாங்கள், 5 நாள் வேலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.