மலேசியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு சட்டத்தை உயர்ந்த பட்சம் நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் அறிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டவர்கள் இலங்கையர்கள் எனின், அவர்களை இலங்கைக்கு அழைத்து அவர்களுக்கு எதிராக தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். நாடு நல்லதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதனைக் குழப்பும் ஒரு நாசகார செயலாக இதனைப் பார்க்கின்றோம்.
சிலர் முன் யோசனையின்றி முன்னெடுக்கும் இதுபோன்ற நடவடிக்கையின் பின் விளைவுகளை அவர்கள் அறியாதுள்ளனர். இதுபோன்ற சக்திகள் பலவீனப்படுத்தப்படல் வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் அறிவித்துள்ளார்.