தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்த்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியனந்தம் (28 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால், இந்த சம்பவம் கொலையாகவிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts