தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அடுத்த வாரம் முடிவு!!

ஒக்டோபர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பது குறித்த முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

ஒன்பது மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஒரு முடிவு எட்டப்படும்.

நாட்டின் கோவிட்-19 நிலமையைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்குள் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.

விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஒரு முடிவு அறிவிக்கப்படும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடுவதை பத்து நாள்களில் முடிக்க முடியும் என்று நம்புகின்றோம். ஓகஸ்ட் தொடக்கத்தில் இருந்து பாடசாலைகளை மீண்டும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க முடியும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor