தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை Exam <இடைவௌி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலமும் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிட்சை பெறுபேறுகள் நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை அதிபரின் ஊடாக நவம்பர் 4ஆம் திகதி முன்னர் விண்ணப்பிக்கலாம்.

Recommended For You

About the Author: Editor