தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பு விடுத்த ரணில்

thaya-masterஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த அழைப்பை தயா மாஸ்டர் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் ஊடாக இந்த இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை விநாயகமூர்த்தி உறுதி செய்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆளும் கட்சியில் பல புலி உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், தயா மாஸ்டருடன் அரசியல் நடத்துவதில் என்ன தவறு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.