தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில்!- படையினருக்கு ஹோட்டல் திறக்கிறார் ஜனாதிபதி

mahinda_rajapaksaவலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலையும் ஜனாதிபதி எதிர்வரும் 12ம் திகதி திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வலி.வடக்கில் மயிலிட்டிப் பகுதி கடந்த 23 வருடங்களாகப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி மயிலிட்டியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த “யோக்கட்’ தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த மாத இறுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலியில் படையினர் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.

தற்போது மயிலிட்டித் துறைமுகத்தை அண்மித்து படையினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “ஹோட்டலை’ யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் பயணமாக வரும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.