தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேசசபை உப தலைவர்கள் இருவர் ஆளும் கட்சியில் இணைவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர்.

TNA go to upf

வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேசசபை உப தலைவரான சாந்தசோரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உப தலைவர் லோகசிங்கம் ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து சிறிலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த மற்றும் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்ன, தொழில் சங்கத்தின் ஜனாதியின் இணைப்புச் செயலாளர் சுமித் விஜேசிங்க, சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாகச் செயலாளர் ஆரியரத்ன ஆகியோர் உடனிருந்தனர்.