தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று மட்டக்களப்பில் தாக்கல் செய்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பில் தாக்கல் செய்தது.இந்த வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை  தமிழரசுக்  கட்சியின் பிரதி செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கே.கருணாகரம் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களாக, கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கோவிந்தன் கருணாகரம், கதிர்காமாத்தம்பி குருநாதன், இராசையா துரைரெத்தினம், இரத்தினசிங்கம் மகேந்திரன், இந்திரகுமார் நித்தியானந்தம், சோமசுந்தரம் யோகானந்தராசா, கிருஸ்ணபிள்ளை சேயோன், சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், மார்கண்டு நடராசா, பழனித்தம்பி குணசேகரன், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தங்கராசா மனோகரராசா, பரசுராமன் சிவலோசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.