தமிழ், சமூக துறைசார் நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வேண்டும்: மேலதிக அரசாங்க அதிபர்

தமிழ்துறை மற்றும் சமூக துறையில் முடங்கி கிடக்கின்றன நிதிகளை பயன்படுத்துவதற்கும், துறைசார்ந்த பட்டதாரிகளை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கிகாரத்தினை பெற்றுத் தருமாறு யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுததார். பட்டதாரி பியிலுனர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது, அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது, சமூகவியல் பாடநெறிகளை கற்றுக் கொண்டு பட்டதாரிகள் இருக்கின்றார்கள், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பல நிதிகள் முடங்கிக் கிடக்கின்ற வேளையில், மாற்றுத் திறனாளிகளையும், வலுவிழந்தவர்களுக்கும் உதவும் நோக்கத்துடன், சமூச சேவை அமைச்சினால் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் துறைசார்ந்த பட்டதாரிகள் பலர் இருக்கின்றார்கள் அவர்களை துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கான ஆதிக்கத்தினை வழங்குவதுடன், துறைசார்ந்தவர்களை நியமித்தால் நாட்டில் நற்பண்புகளையும், ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க உதவுமென்றும் அவர் கூறினார்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமனங்கள் வழங்குவதற்கு 1000 ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றார்கள். ஆனால், அவசர தேவை கருதி 516 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் கிராம மக்களின் வளத்தினை பயன்படுத்தி நல்ல அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு பட்டதாரி பயிலுனர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அபிவிருத்தியை நோக்கிய யாழப்பாணம் 3 அல்லது 5 வருடங்களில் எவ்வாறான அபிவிருத்தியைக் கண்டுள்ளதென அடைவ மட்டத்தின் மூலம் பார்க்க கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு பட்டதாரி பயிலுனர்களின் வேலையும், மக்களுடன் இணைந்து மக்கள் மத்தியில் அபிவிருத்திகளை மேற்கொள்வதில் அமைய வேண்டுமென்றார்.

அத்துடன், நிதி, நிர்வாக பண்புகளை பின்பற்றி எந்த இடத்திலும் கடமை செய்ய வேண்டுமென்றும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.