தமிழ் இன அழிப்பின் திட்டமிட்ட செயலே இது – மாவை

mavai mp inஅரசு தமிழர் பகுதிகளில் தனது படைகளை நிலைபெறச் செய்து தந்திரமாக எமது கலாசாரத்தையும், பண்பாடுகளையும் அழித்து வருகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாராசா.

காரைநகரில் 11 வயதுச் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நேற்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரி வித்ததாவது;

“பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். குழந்தைகளுக்கு இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. பெண்கள் அமைப்பு அத்தகைய விடயங்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.

அந்தச் சிறுபிள்ளை எவ்வாறு அடையாளம் காட்டும்? எப்படி அவனது பெயரை தெரிந்திருக்க முடியும்? இந்த நிலைமை தொடரக்கூடாது. இங்குள்ள முப்படையினரும் எமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியவில்லை – கஜேந்திரன்

சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் உரிமைகளைப் பெறமுடியும் – சரவணபவன்

சிறுமி வன்புணர்வு; அடையாள அணிவகுப்பில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக காரைநகரில் போராட்டம்