தமிழ் அரசியல் கைதியின் கொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.முன்னணி அழைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதியின் கொலைக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை எதிர்வரும் 15ம் திகதி யாழில் நடத்தவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.15ம் திகதி காலை 11 மணி தொடக்கம், 12.30மணிவரையில் குறித்த போராட்டம் யாழ்.நகரிலுள்ள பேரூந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் இடம்பெறும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு சமுக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அi னவரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடு த்திருக்கின்றது.

இதேவேளை, குறித்த கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த போராட்டம் நீதிமன்ற தடையுத்தரவையடுத்து நிறுத்தப்பட்டு, அதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றி பெற்றுள்ள நிலையில் கட்சி இரண்டாவது ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.