தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு

ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

tna

இந்தச் சந்திப்பில் பா.ஜ.க. தேசிய செயலாளர் பி.முரளிதர் ராவ் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான விஜய் ஜாலி ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றது என்றும் ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.