தமிழ்ச்செல்வனின் மாமனாரும் போட்டி

balasubramaniyamதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மாமனாரான பாலசுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து சுயேட்சை குழுவாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.