தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு! தேர்தலிலும் போட்டி!

Tamiliniதமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நேற்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இவருக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டவுடன் வட மாகாண சபைத் தேர்தலில் ஆளுந்தரப்பு வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படவுள்ளார்.

அத்துடன் இவர் இந்தக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலும் வடபகுதியில் ஈடுபடத்தப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தமிழினி வட மாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தமிழினி புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றங்கள் எதுவும் இவரை குற்றங்காணவில்லை. எனவே வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர் செய்துள்ள விண்ணப்பத்தை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் 2009ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி தமிழினி அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் 2013ம் ஆண்டு ஜுன் 26ம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts