தமிழினி விடுதலை

Tamiliniதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று விடுதலை செய்யப்பட்டார்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

தமிழினி அடுத்த மாதம் விடுதலை, வடமாகாண தேர்தலிலும் போட்டி?