தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் விபரம்

anantha-sankaree-athatheranaவட மாகாணசபை தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் சார்பில் போட்டியிடுவோர் தெரிவு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா. சங்கையா தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் மத்திய பொதுக் குழு கூட்டம் யாழ். மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களுக்கான வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது.

யாழ். மாவட்டம்

யாழ். மாவட்டத்திற்கு கந்தப்பர் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவும், கணபதிப்பிள்ளை தருமலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரியும், கந்தசாமி திருலோகமூர்த்தியும், வினுபானந்தகுமாரி கேதுரெட்ணமும் தெரிவு செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேரி கமலா குணசீலன் ஆகியோரே தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டதாக நிர்வாக செயலாளர் மேலும் கூறினார்.