இராணுவமே வடக்கின் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. அவர்கள் இன்னமும் எங்களைப் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையிலேயே வைத்திருக்கின்றனர். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
“மக்கள் இறுதிக்கட்டப் போரில் பலவற்றை இழந்திருக்கின்றார்கள். அவர்களது உணர்வுகள் இறுதிக் கட்டப் போரில் நடந்தவை தொடர்பில் நீதியான விசாரணை தேவை என்றதாக இருக்கின்றது.
எனவே கடந்த காலத்தை மறக்கச் செய்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல.
வடக்கில் இராணுவமே சகல விடயங்களையும் கட்டுப்படுத்துகின்றது. தற்போது இராணுவ முகாம்களை அகற்றியதாக இராணுவம் சொல்கின்றது.
ஆனால் இராணுவ முகாம் அகற்றிய பகுதியில் சைக்கிளில் அவர்கள் ரோந்து நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர். தங்களது புலனாய்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் செய்வதன் எண்ணம், இன்னமும் பயங்கரவாதிகளின் பிரதேசத்தில் பணியாற்றுவதாக எண்ணித்தான். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.