தமிழர்களை ஆளவிட்டால் தங்களை விஞ்சி விடுவார்கள் என்று சிங்கள மக்கள் பயப்படுகின்றனர். – விக்கினேஸ்வரன்

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே தழிழர்களை உலகமே இன்று திரும்பி பார்க்கின்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளனர் !உலகில் மிகப்பிரசித்தி பெற்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட மாவீரான பிரபாகரன், தமிழர்களை அடக்கி ஆண்டான் என்றும். பின்னர் அவர் போரில் கொல்லப்பட்டான் என்று தான் உலகம் அறிந்து வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வடமாகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

அந்த பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் போரில் செய்த சாதனைகளை இந்த உலகம் நன்றாகவே அறியும். அந்த பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்களே இன்று நாங்கள் நிற்கும் இந்த தளத்தைத் தந்தவர்கள்.

உலகத்திற்கு தமிழ் மக்களின் விருப்பம் அவர்களது மனதின் எண்ணம் என்னவொன்று தெரியாது. ஒருவேளை தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளவிட்டால் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களையும் விஞ்சி விடுவார்கள் என்று சிங்கள மக்கள் பயப்படுகின்றனர். ஆனால் எங்களை நாங்கள் ஆளும் விருப்பதை இந்த உலகிற்கு பறைசாற்றும் தினமாக 21ஆம் திகதி அமைந்துள்ளது.

நாங்கள் எங்களை ஆள வேண்டும். அது ஒரு நாட்டிற்குள்ளாக இருக்கலாம். அல்லது தனியாக இருக்கலாம். ஆனால் தமிழர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும். எங்களை நாங்களே ஆள வேண்டும் என்று வாக்குகள் மூலம் தமிழர்கள் உலகிற்கு சொல்லுங்கள் என்றார்.

இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.