எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் 23ஆம் திகதி நடைபெறவிருந்த குறித்த செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் கல்முனையில் அமைந்துள்ள ஜெயா திருமண மண்டபத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்