தமிழரசுக் கட்சியின் அலுவலகம் தெல்லிப்பழையில் திறந்து வைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம் தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் .சிவஞானம் சிறிதரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

et(1)

தொடர்ந்து தந்தை செல்வநாயகம் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு நினைவுச்சுடரை மாவை சேனாதிராசா ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor