Ad Widget

தமிழக மீனவர்களின் 74 படகுகள் விடுவிப்பு

தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 74 படகுகளையும் விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில்உள்ள படகுகளை விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நல்லெண்ண அடிப்படையில் இப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விடுவிக்கப்படும் படகுகள் பழுதடைந்து இருந்தால் அதற்கான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடம் இந்திய மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படகுகள் விடுவிக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதோடு சில படகுகள் 8 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவைகள் பழுதடைந்திருந்தால் அதற்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர் சங்கம் தலைவர் யு.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

Related Posts