தப்பியோடிய 500 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் !

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையத்தில் இன்று காலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் குறித்த நிலையத்தின் பாதுகாப்புக்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் முகாமில் சுமார் 1000 கைதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.