தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்து: ஐவர் காயம்

accidentயாழ்ப்பாணத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி தப்பியோடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ். பிரதான வீதியூடாக பயணித்த பஸ், பஸ்தியன் சந்தியில் உள்ள வீடொன்றின் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டு வளவிற்குள் சென்றுள்ளதாக அருகிலிருந்தோர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த யாழ். போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.