தனிமையில் வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!

dead-footபருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவசம்பு சிவபாலன் (75) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அங்கு சென்று குறித்த சடலத்தினை, பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன் தயான் முன்னிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இந்த சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் மட்டும் தனிமையில் வசித்து வந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.