தந்திச் சேவையை நிறுத்த தீர்மானம்

Sri Lanka telegram serviceஇலங்கையிலிருந்து தந்திச் சேவையினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து தந்திச் சேவை நிறுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.